ஓடிடியில் வெளியான தமிழ் திரைப்படங்கள்..!

பிப்ரவரி 14ஆம் தேதி 2கே லவ் ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஜெகவீர், மீனாட்சி, பால சரவணன், வினோதினி மற்றும் பலர் நடித்திருந்தனர். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இப்படம் நேற்று (மார்ச் 14) அமேசான் பிரைம் மற்றும் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியது.
சமுத்திரகனி, தம்பி ராமையா ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த படம் தான் ராஜா கிளி. உமாபதி ராமையா இயக்கி இருந்த இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இப்படம் (மார்ச் 14) டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியது.
சமுத்திரக்கனி மற்றும் தன்ராஜ் கொரனானி நடிப்பில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி ராமம் ராகவம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தன்ராஜ் கொரனானி இயக்கியிருந்தார். அப்பா – மகன் உறவை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியான இந்த படம் (மார்ச் 14) சன் நெக்ஸ்டில் வெளியாகியது.
லிஜோமோல், வினித், ரோகினி, அனுஷா பிரபு, தீபா கணேஷ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் தான் காதல் என்பது பொதுவுடைமை. தன்பாலின ஈர்ப்பாளர் குறித்து பேசி இருந்த இந்த படம் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று திரைக்கு வந்தது. இந்நிலையில் இப்படம் (மார்ச் 14) டென்ட்கொட்டா தளத்தில் வெளியாகியது.
நட்டி நடராஜ் நடிப்பில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி வெளியான திரில்லர் படம் தான் சீசா. இந்த படத்தை குணா சுப்ரமணியம் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நிஷாந்த் ரூசோ, நிழல்கள் ரவி, ஜீவா ரவி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் (மார்ச் 14) ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியது.