தமிழக முதல்வர் ஸ்டாலினின் அதிரடி அறிவிப்பு..! தளபதி விஜய்யை பின்பற்றுகிறாரா..? 

 
1
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் 10, 12 வகுப்பு பொது தேர்வில் தமிழில் 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா என்று அறிவித்துள்ளார்.

ஜூன் 14ஆம் தேதி அரசு சார்பில் மாணவர்களுக்கு இந்த பாராட்டு விழா நடைபெறும் என்றும் இந்த பாராட்டு விழாவுக்கு தகுதியுடைய மாணவர்கள் தவறாமல் கலந்து கொள்வதை உறுதி செய்திட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

ஒரு பக்கம் தளபதி விஜய் 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் திட்டம் குறித்த தேதியை சமீபத்தில் அறிவித்தார் என்பது தெரிந்தது. ஜூன் 28ஆம் தேதி சென்னை உட்பட சில மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கும், ஜூலை 3ஆம் தேதி மீதமுள்ள மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப் போவதாக அறிவித்த நிலையில் தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பை பார்க்கும்போது அவர் தளபதி விஜய்யை அவர் பின்பற்றுகிறாரா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

From Around the web