பிரபல காமெடி நடிகர் சார்லி மகனின் திருமணத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்..!

 
1

1983 ஆண்டு பொய்க்கால் குதிரை திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகர் சார்லி. நகைச்சுவை நடிகராகவும் துணை நடிகராகவும் கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

விஜயுடன் காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அமர்க்களம் போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அண்மைக்காலமாகவே கதைக்கும் கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் சார்லியின் மகன் அஜய்தங்கசாமி - பெர்மிசியாடெமி ஆகிய இருவருக்கும் நேற்றைய தினம் திருமண வரவேற்பு பிரம்மாண்டமாக நடந்துள்ளது.

இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளதோடு முதலமைச்சரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார். தற்போது குறித்த புகைப்படம் வைரலாகி உள்ளது.

இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு பசுமை மரக்கன்று கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், நியூஸ்-7 டி.வி. மேலாண்மை இயக்குனர் வி.சுப்பிரமணியன, நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, நாசர், விஜயகுமார், சின்னி ஜெயந்த், நடிகைகள் சச்சு, சுகன்யா, விஜி சந்திரசேகர், இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பி.வாசு கே.எஸ்..ரவிகுமார், சந்தான பாரதி, ஆர்.சுந்தர்ராஜன், விஜய், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், பிரமிடு நடராஜன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, கங்கை அமரன் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
 

From Around the web