அதிகாலை காட்சிக்கு காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி சொன்ன தமிழக அரசு..! 

 
1

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது…இப்படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது…இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.அது ரசிகர்கள் பெரிதும் கொண்டாட படும் விதமாக அமைந்து இருந்தது.

அதன்படி 19-ம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நாளுக்கு 5 காட்சிகள் சிறப்புக் காட்சிகள் திரையிடலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது….இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் அதிகாலை 4 மணி அளவில் லியோ படத்தின் சிறப்புக் காட்சி தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்…இப்படி ஒரு சூழ்நிலை தான் இருந்தது.

இந்நிலையில் அதனை தெளிவுபடுத்தும் வகையில் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்…அதில் திரையரங்குகளில் ‘லியோ’ படத்தின் முதல் காட்சியை காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் எனவும் இறுதிக் காட்சி இரவு 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது…இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..ரசிகர்கள் காலை காட்சி எதிர்பார்த்த நிலையில் இப்படி மாறி விட்டது…

From Around the web