இன்று வெளியாகும் 'இந்தியன் 2' படத்திற்கு சிறப்பு அனுமதி வழங்கிய தமிழக அரசு..! 

 
1

கடந்த மூன்று வருடங்களாக தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறது.அதிலும் குறிப்பாக ஐந்து மணி ஆறு மணிக்கு ஆரம்பிக்கப்படும் சிறப்பு காட்சிகளுக்கு தடை விதித்த தமிழக அரசு, 9:00 மணி காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்து வருகின்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் கமலஹாசன் நடித்துள்ள  இந்தியன் 2 படத்தில் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தயாரிப்பாளர் சார்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில். அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட்டுக்கொள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு. தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

இதனால் இன்றைய தினம் தியேட்டர்களின் வாசலில் பட்டாசு வெடிக்கப்பட்டும் என்பது உறுதி.

From Around the web