40 கோடிக்கும் அதிகமானோர் அர்த்தம் தெரியாமல் பார்த்த தமிழ் பாடல்..!!
நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பாடல்கள் எழுதுதல், பாடுதல் என அனைத்திலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் நடிகர் தனுஷ். கடந்த 2011-ம் ஆண்டு தனுஷ் பாடிய தங்லீஷ் (தமிழ் ஆங்கிலம்) பாடல் ஒன்று மில்லியன் கணக்கான மக்களை கவர்ந்தது. அதுதான் “ஒய் திஸ் கொலவெறி டீ”.
யூடியூப்பில் அதிக பார்வைகளைப் பெற்ற முதல் இந்திய வீடியோவாக இந்தப் பாடல் அமைந்தது. முதலில் இந்த பாடலை மனைவி ஐஸ்வர்யா உடன் சேர்ந்து பாடினார் தனுஷ். பிறகு அவர் மட்டும் பாடும் விதமாக மாற்றப்பட்டது. படத்துக்கான பாடலை அவர் எழுதிய நிலையில், அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்தார்.
தற்போது அவரது கொலைவெறீ டீ பாடல் 40 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. யூடியூப்பில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமானோர் பார்த்த முதல் இந்தியப் பாடலாக இது அமைந்தது. ஆனால், இந்தப் பாடல் வெளியாகி 12 ஆண்டுகள் ஆன நிலையிலும், பாடல் மீதான மக்களின் மோகம் இன்னும் குறையவில்லை.
மிகவும் சிம்பிளாக உருவாக்கப்பட்ட இந்த பாடல் இப்படியொரு ஹிட்டாக மாறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் இன்றும் சிலருக்கு இந்த பாடலின் அர்த்தம் புரியவில்லை. நல்ல இசைக்கு எல்லைகள் இல்லை என்று கூறப்படுகிறது, அதே போல் இந்த பாடல் தென்னாட்டில் இருந்து வந்ததிலிருந்து உலகம் முழுவதும் ஒலிக்கிறது.