”தப்பு அவ்ளோதான்” தெறிக்கவிடும் ‘ஜகமே தந்திரம்’ பட டிரெய்லர்..!

 
ஜகமே தந்திரம் பட டிரெய்லர்

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் அடுத்த வாரம் வெளிவரவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி கதாநாயகியாக நடித்துள்ளார். கலையரசன், சவுந்தரராஜா, வடிவுக்கரசி, தீபக் ரமேஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ஜோஜு ஜியார்ஜ் ‘ஜகமே தந்திரம்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். பிரேவ் ஹார்ட், ட்ராய், வொண்டர் வுமன் போன்ற படங்களில் நடித்து புகழடைந்த ஹாலிவுட் ஜேம்ஸ் காஸ்மோ இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழ் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வரும் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ‘ஜகமே தந்திரம்’ படம் வெளிவரவுள்ளது. 

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸுடன் இணைந்து ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவன இந்த படத்தை தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட 17 மொழிகளில் இப்படம் வெளியாகிறது. 
 

From Around the web