படுபிசியாக இருக்கும் தாரா..அடுத்தடுத்த படங்கள்...

தற்போது இவருக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். நயன்தாரா தனது பிஸியான வேலைகளின் நடுவில் கிடைக்கும் நேரத்தை தனது குழந்தைகளுடன் செலவிட்டு வருகிறார். அதுமட்டுமின்றி சினிமாவில் சம்பாதித்த பணத்தை தொழிலில் நிறைய முதலீடு செய்து வருகிறார். டீ விற்பனை நிறுவனம், நாப்கின் நிறுவனம் என முதலீடு செய்துள்ளவர் 9 Skin என்ற அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தில் நடிகை நயன்தாராவுடன் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வரும் நயன்தாரா தற்சமயம் பல படங்களை தான் கைவசம் வைத்துள்ளார். அதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.
யோகிபாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' என்ற படத்தில் நயன்தாரா நடித்து முடித்துள்ளார். அறிமுக இயக்குநர் செந்தில் நல்லசாமி இயக்கத்தில் நயன்தாரா ‘ராக்காயி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன்-2', இத்துடன் கவின் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். ‘டியர் ஸ்டூடன்ட்ஸ்' என்ற மலையாள படத்தில் நிவின் பாலியுடனும், டாக்சிக் என்ற கன்னட படத்தில் ‘கே.ஜி.எப்.' புகழ் யாஷ் உடனும் நடித்துக்கொண்டிருக்கிறார். இதுதவிர ‘தனி ஒருவன்-2', மம்முட்டியுடன் புதிய படம் என வரிசையாக இவர் தற்பது நடித்து வருகிறார். இதன் மூலம் அடுத்த ஆண்டு வரை பாடு பிசியான நடிகையாக மாறியுள்ளார் நடிகை நயன்தாரா.