கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் செல்பி எடுத்த டிடிஎஃப்... கொந்தளித்த தேமுதிக நிர்வாகிகள்..!

 
1

பைக் ரைடு வீடியோக்கள் மூலம் இளசுகள் மத்தியில் செம பேமஸ் ஆனவர் தான் TTF வாசன். 2K கிட்ஸ் மத்தியில் பில்டப் கிங்கான வலம் வரும் இவர் பைக் ரைடில் சாகசம் செய்வதில் கில்லாடி 

டிஜிட்டல் உலகில் இவர் எந்த அளவுக்கு பேமஸ் ஆக இருக்கிறாரோ அதற்கு ஒரு படி மேல் காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.இளசுகள் மத்தியில் இவருக்கு இருக்கும் மவுஸால் மஞ்சள் வீரன் என்ற படத்தில் நாயகனாக TTF வாசன் நடித்து வருகிறார் .

இந்நிலையில், சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , நடுரோட்டில் வீலிங்க் அடித்து கோர விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார் .இதையடுத்து மருத்துவமனை ஜெயில் கோர்ட்டு என தற்போது வலம் வரும் இவர் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்துள்ளார்.

கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, வெளியேறும் போது வழக்கம் போல் அவரை சூழ்ந்த ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கியுள்ளார் பின்னர் அவர்களுடன் வாசன் செல்ஃபீ எடுத்துள்ளார்.

இதனை கண்டு செம கோபம் அடைந்த தேமுதிக நிர்வாகிகள் போட்டோ எடுக்குற இடமா இது. யாரா இருந்தாலும் தூக்கி அடிச்சிடுவ பாத்துக்கோங்க என்று திட்டியப்படி அவர்களை அங்கிருந்து செல்லும்படி தேமுதிக நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர் .

From Around the web