சினிமாவில் களமிறங்கும் டி.டி.எஃப் வாசன்: என்ன படம் தெரியுமா..??
சமூகவலைதளங்களில் பல்வேறு வைரலான சம்பவங்களுக்கு சொந்தக்காரரும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக்கொள்பவருமான டி.டி.எஃப். வாசன் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
Jun 27, 2023, 11:05 IST

தமிழ் சினிமாவில் செந்தில் செல்வம் என்பவர் ரூ. 6 கோடி பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கவுள்ளார். பல முன்னணி நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகனாக டி.டி.எஃப். வாசன் நடிக்கவுள்ளார்.
வரும் 29-ம் தேதி அவருடைய பிறந்தநாள் என்பதால், அன்று இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்படவுள்ளது. அதேநாளில் படத்துக்கான பூஜையை நடத்திட படக்குழு முடிவு செய்துள்ளது. பரபரப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் இடையே வலம் வரும் டி.டி.எஃப். வாசன் கதாநாயகனாக நடிப்பது கோலிவுட் சினிமாவில் கவனமீர்த்தது.
இதுதொடர்பாக பேசியுள்ள டி.டி.எஃப் வாசன், என்னை தமிழக மக்கள் நிச்சயமாக ஹீரோவாக ஏற்றுக்கொள்வார்கள். தன்னுடைய சினிமா சார்ந்த பயணத்துக்கு மக்கள் சிறப்பான ஆதரவு தருவார்கள் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக கூறியுள்ளார்.