உயிருடன் இருக்கும் பிரபல நடிகைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட அதிர்ச்சி..!

 
உயிருடன் இருக்கும் பிரபல நடிகைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட அதிர்ச்சி..!

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தேர்தல் களத்தில் நட்சத்திர பேச்சாளராக வலம் வரும் பிரபல நடிகை உயிருடன் இருக்கும்போதே, அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக ஓட்டப்பட்டுள்ள போஸ்டர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1999-ம் ஆண்டு வெளியான ‘சங்கமம்’ படத்தில் அறிமுகமான விந்தியா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோயின் நிலையிலே இருந்துவிட்டு பின்பு ஒதுங்கிவிட்டார். 2011-ம் ஆண்டுக்கு பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதிருந்த அபிமானத்தால் அதிமுக-வில் தன்னை ஐக்கியமாக்கி கொண்டார்.

அப்போது தொடங்கி தற்போது வரை அதிமுக கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அனல் பறக்கும் வகையில் இவருடைய பேச்சு இருந்தது. கடந்தாண்டு அதிமுக-வின் கொள்கை பரப்புச் துணைச் செயலாளராக விந்தியா நியமிக்கப்பட்டார்.

null



தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று திமுக-வுக்கு எதிராக பரப்புரை செய்த நடிகை விந்தியா உயிருடன் இருக்கும் போதே மாரடைப்பால் இறந்துவிட்டதாக சிலர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டியுள்ளனர்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள நடிகை விந்தியா, ஒருவர் உயிருடன் இருக்கும்போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியிருப்பதாகவும் இதுபோன்ற போஸ்டர்களைப் பார்த்தால் ஆயுள் கூடும். உலகத்திலேயே தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரைப் பார்த்து தானே சிரிக்கும் பாக்கியம் கிடைத்தவர்களில் நானும் ஒருத்தி. மு.க.ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரே என போஸ்டர் போட்டு அலுத்து போய்விட்டார்கள் போல. ஆண்டவனைத் தவிர தனக்கு யாராலும் என்ட் கார்டு போட முடியாது என தனது பதிவில் காரசாரமாக கருத்து பதிவிட்டுள்ளார் விந்தியா.
 

From Around the web