நடிகர் சித்தார்த்துக்கு  கண்ணீர் அஞ்சலி போஸ்டர்- அவர் என்ன சொன்னார் தெரியுமா..?

 
நடிகர் சித்தார்த்

நடிகர் சித்தார்த் இறந்துவிட்டதாக கூறி சமூகவலைதளத்தில் உலா வந்த போஸ்டர் குறித்து அவரே பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கவனிக்கத்தக்க பல்வேறு படங்களில் நடித்துள்ளார் சித்தார். தொடர்ந்து அவர் சினிமாவில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமகால அரசியல் செயல்பாடுகளை குறித்து சித்தார்த் கருத்து வெளியிடுவது வழக்கம்.


அதில் சில கருத்துகள் அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதும் உண்டு. இதனால் அவரை விமர்சித்து பலரும் கமெண்டு செய்வார்கள். சித்தார்த் கருத்தால் அதிருப்தி அடையும் சிலர் புகார், வழக்கும் என்று எல்லை மீறுவதும் உண்டு.

இந்நிலையில் தனக்காக வெளியான கண்ணீர் அஞ்சலி போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சித்தார்த். இது பல நெட்டிசன்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்த காரணம் தற்போது தெரியவந்துள்ள. இந்தி சீரியல் நடிகர் சித்தார்த் சுக்லா சமீபத்தில் காலமானார். அவருக்கு பதிலாக தமிழ் நடிகர் சித்தார்த் இறந்துவிட்டதாக நினைத்து புகைப்படத்தை வைத்திருக்கலாம் என சிலர் கருத்து கூறி வருகின்றனர்.

From Around the web