‘குக் வித் கோமாளி’ அஷ்வின் நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் டீசர் வெளியீடு!

 
1

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் அஷ்வின். இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் அஷ்வின் - ஷிவாங்கி ஜோடிக்குப் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்நிகழ்ச்சியில் அஷ்வினுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில் தற்போது ‘காதல் ஒன்று கண்டேன்’, ‘என்ன சொல்ல போகிறாய்’ உள்ளிட்ட படங்களில் அஷ்வின்  நடித்து வருகிறார்.

‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் அவந்திகா, தேஜஸ்வினி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். குக் வித் கோமாளி புகழ், டெல்லி கணேஷ், சுபா பஞ்சு ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அறிமுக இயக்குநர் ஹரிகரன் இயக்கும் இப்படத்தை ட்ரெண்ட்ஸ் ஆர்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த டீசர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேலும் அஸ்வின் முதல் முறையாக நடிக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


 

From Around the web