மூன்று விஜய் டிவி சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்..!
Sep 11, 2023, 06:05 IST
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
விரைவில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதால் சில சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளனர். இந்த நிலையில் இன்று மூன்று சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் அதிரடியாக மாற்றப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ஆஹா கல்யாணம் இனி 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே 2 சீரியல் இனி இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
மேலும் 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த மகாநதி சீரியல் இனி இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் போது ஈரமான ரோஜாவே சீசன் 2 முடிவுக்கு வந்துவிடும் என்பதால் இந்த நேரம் மாற்றம் நடைபெற்று இருப்பதாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.