சொல்லுங்க மாமா குட்டி... லவ் டுடே வெளியாகி இன்றுடன் 1 ஆண்டு நிறைவு..!
 

 
1

கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடித்த திரைப்படம் லவ் டுடே. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.சிக்கல்களை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் நடித்தவர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களில் எதார்த்தமாக வாழ்ந்திருப்பார்கள் அந்த அளவிற்குத் தனது முழு திறமையையும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் வெளிப்படுத்தி இருப்பார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சத்யராஜ், ராதிகா, யோகி பாபு போன்றோர்கள் இந்த திரைப்படத்தில் சிறப்பாக நடித்த அசத்தி இருப்பார்கள். அதேசமயம் அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இளம் தலைமுறை நடிகர்களும் சிறப்பாக நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையும் இப்படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

இயல்பாக தற்போது இருக்கும் இளம் தலைமுறைகளுக்கு ஏற்றவாறு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதால் தற்போது உள்ள இளைஞர்களால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு இது ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.

இந்நிலையில் பிரதீப், இவானா, ராதிகா, சத்யராஜ், யோகிபாபு, ரவீனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘லவ் டுடே’ திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு.. இதை ரசிங்கர்கள் கொண்டாடி வருகின்றனர் 

From Around the web