64 வயதில் 44 வயது நடிகையை நான்காவதாக திருமணம் செய்த நடிகர்..!!
 

மூன்றாவது மனைவியிடம் இருந்து விவகாரத்து பெறுவதற்கு முன்னதாகவே, நடிகை பவித்ரா லோகேஷை திருமணம் செய்துகொண்டுள்ளார் நடிகர் அல்லரி நரேஷ். 
 
அல்லரி நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ் திருமணம்

தெலுங்கு சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகரான அல்லரி நரேஷ், நடிகை பவித்ராவை திருமணம் செய்துகொண்டதாக சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகை விஜயநிர்மலாவின் மகன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரராக இருப்பவர் அல்லரி நரேஷ் (64). இவர் தெலுங்குப் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகராக உள்ளார். ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்துகொண்டு விவகாரத்து பெற்ற நரேஷ், தற்போது பவித்ரா (44) என்கிற நடிகையை நான்காவது முறையாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அல்லரி நரேஷ் மற்றும் பவித்ரா லோகேஷ்

இதுதொடர்பான தனது திருமண வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்ட அவர், ”எங்களது இப்புதிய பயணத்தில் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருக்க உங்களுடைய வாழ்த்துக்கள் வேண்டும். இந்த பிணைப்பு என்றும் தொடர வாழ்வாங்கு வாழ்த்துங்கள்” என்று தெரிவித்திருந்தார். இந்த பதிவுக்கு நடிகை குஷ்பு மட்டுமே வாழ்த்துக்களை பதிவிட்டு இருந்தார். இதையடுத்து இந்த செய்தி சமூகவலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, வீடியோ பதிவிட்ட சில நிமிடங்களில் அதை நரேஷ் நீக்கிவிட்டார்.

நடிகர் அல்லரி நரேஷ் ஏற்கனவே ட்3 முறை திருமணம்  செய்துகொண்டவர். தற்போது மூன்றாவது மனைவியிடம் இருந்து விவகாரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோன்று நடிகை பவித்ராவும் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவகாரத்தானவர். இவர் தமிழில், அயோக்யா, க/பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம், கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது புதுமணத்தம்பதிகள் இருவரும் தேனிநிலவு கொண்டாட துபாய் சென்றுள்ளனர். 

From Around the web