நான் செத்துவிட்டேனா..?? பொங்கி எழுந்த சாமி பட வில்லன்..!!

பிரபல குணச்சித்திர நடிகர் கோட்டா சீனிவாசன் உயிரிழந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் வெளியான வதந்திக்கு அவர் வீடியோ மூலம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
 
kota srinivasa rao

தெலுங்கு சினிமாவில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானர் கோட்டா சீனிவாசன் ராவ். இவர் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சாமி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் நடித்த சனியன் சகட கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது.

அதை தொடர்ந்து சகுனி, திருப்பாச்சி, கோ, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஏய் போன்ற பல்வேறு தமிழ் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஹைதராபாத்தில் வசித்து வரும் கோட்டா சீனிவாச ராவுக்கு 75 வயது ஆகிறது.


இவர் இறந்துவிட்டதாக கூறி சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இது தெலுங்கு திரையுலகில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு மறுப்பு தெரிவித்து கோட்டா சீனிவாச ராவ் வீடியோ வெளியிட்டார். அதில், சமூகவலைதளங்கள் என்னை கொன்றுவிட்டன. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம், இதுபோன்ற பொய் செய்திகளை பரப்புவர்களுக்கு தக்க பாடம் கிடைக்கும். நான் இறந்துபோனதாக வெளியான செய்தி மிகவும் துரதிருஷ்டமானது. தெலுங்கு வருடப் பிறப்பு கொண்டாட தயாராகி வருகிறேன். இந்த வதந்தி பரவியதன் காரணமாக என் வீட்டுக்கு தற்போது 10 காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குகின்றனர் என்று வீடியோவில் கோட்டா சீனிவாச ராவ் குறிப்பிட்டுள்ளார். 

From Around the web