தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு..!

 
முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் நடிகர் சிரஞ்சீவி
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் நடிகரான சிரஞ்சீவி தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்திப் பேசினார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அவரை பலரும் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர். மேலும், அவருடைய ஆட்சி மற்றும் முக்கிய அறிவிப்புகளுக்கு பலரும் வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் நேற்று நடிகர் பவன் கல்யாண், ஸ்டாலின் ஆட்சி திறமையை பாராட்டி அவருக்கு வாழ்த்து மடல் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து நடிகர் சிரஞ்சீவி முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை சந்தித்துப் பேசியுள்ளார்.

தமிழக முதல்வராக பதவியேற்றதற்கு அவருக்கு சிரஞ்சீவி வாழ்த்து கூறியுள்ளார். இவர்கள் மூவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

From Around the web