காஷ்மீரில் பயங்கர நிலநடுக்கம்- லியோ படக்குழு முக்கிய பதிவு..!!

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லியோ. மாஸ்டர் படத்துக்கு பிறகு இருவரும் இரண்டாவது முறை இணைந்து பணியாற்றி வருகின்றனர். மேலும் லோகேஷின் முந்தைய படமான விக்ரம் மாபெரும் வெற்றிப் பெற்றது. இதனால் ‘லியோ’ படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லியோ படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் நிலையில் த்ரிஷா மற்றும் ப்ரியா ஆனந்த் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், நரேன், மன்சூர் அலிகான், பாபு ஆண்டனி, ஜியார்ஜ் மரியன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
BLOOODY #Earthquake
— Rathna kumar (@MrRathna) March 21, 2023
தற்போது லியோ படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவும் காஷ்மீரில் தான் உள்ளன. சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்டோரின் காட்சிகள் மட்டுமே எடுத்து முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களின் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காஷ்மீரில் நேற்று இரவு 10.20 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 6.6-ஆக பதிவாகியுள்ளது. நில அதிர்வு உணரப்பட்டத்தை அடுத்து, மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டனர். எனினும் பெரியளவில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை என தேசிய பேரிடர் மேலாண்மை தகவல் வெளியிட்டுள்ளது.
We are safe nanba 😇
— Seven Screen Studio (@7screenstudio) March 21, 2023
- Team #LEO pic.twitter.com/WAOeiP94uM
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள லியோ படத்தின் இணை திரைக்கதை ஆசிரியரும் வசனகர்த்தாவுமான ரத்னகுமார், ”பிளடி எர்த்குவைக் (நிலநடுக்கம்) என்று லியோ பட வசனத்தை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். அதேபோல, படத்தை தயாரித்து வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம், லியோ படக்குழுவினர் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் லியோ படத்தின் ஷூட்டிங்கிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.