‘துணிவு’ பட வில்லன் திடீர் மரணம்...! 

 
1

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படத்தில் வங்கி பணத்தை மோசடி செய்யும் வில்லனாக ரித்துராஜ் சிங் என்பவர் நடித்திருந்தார்.இவர் ஹிந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடிகர் ரித்துராஜ் சிங் கணையத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது . 

இதனை அடுத்து பாலிவுட் திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழில் அவர் 'துணிவு’ என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்ததால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

From Around the web