தலைவர் ரசிகர்களே ரெடியா ? நாளை வெளியாகும் அதகள அப்டேட்..!

 
1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் தான் வேட்டையன் . இந்த படத்தை இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்கியிருந்தார். இதன் காரணத்தினாலே இந்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

அது மட்டும் இல்லாமல் வேட்டையன் திரைப்படத்தில் மஞ்சுவாரியன், ரித்திகா சிங், பகத் பாசில் இவர்களுடன் அமிர்தாபச்சனும் இணைந்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இதன் காரணத்தினாலே இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என மிகுந்த ஆவலாய் காத்துள்ளார்கள் ரசிகர்கள்.

இந்த நிலையில், வேட்டையன் திரைப்படத்தின் டிரைலர் அக்டோபர் இரண்டாம் தேதி வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

வேட்டையன் திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

From Around the web