தளபதி 67 படத்தின் டைட்டில் மற்றும் ப்ரோமோ வெளியானது..!!
‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜூடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் நடிகர் விஜய். இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திலிருந்து வெளியாகும் அறிவிப்புகள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘விக்ரம்’ படத்தை விட பல மடங்கு மிரட்டலான இந்த படம் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை. அதனால் தான் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் பல கோடிகளுக்கு வியாபாரமாகி உள்ளது. இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் இணைந்துள்ளது படம் வேற லெவலில் இருப்பதை உறுதி செய்துள்ளது.
இந்த படத்தின் டைட்டில் மற்றும் ப்ரோமோ வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தளபதி 67 படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு லியோ என பெயர் வைத்துள்ளனர். படம் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் பற்றி சொல்லும் ப்ரோமோ வீடியோ இதோ
— Vijay (@actorvijay) February 3, 2023