விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்கும் இயக்குநர் இவர்தான்..!!

லியோ படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் அவருடைய 68-வது படத்தை இயக்கும் இயக்குநர் தொடர்பான விபரங்கள் இணையத்தில் நேற்று வெளியாகி வைரலாகி வருகின்றன.
 
vijay

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அர்ஜுன், ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், நரேன், ஜோஜூ ஜார்ஜ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ஷூட்டிங்குடன் லியோ படப்பிடிப்பு முடிவுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த படத்தை வரும் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. தற்போது விஜய் நடிக்கும் அவருடைய 68 படத்தை இயக்கப்போவது யார் என்கிற கேள்வி பரவலாக சமூகவலைதளங்களில் எழுந்து வந்தது. ஏற்கனவே அட்லீ, ஏ.ஆர். முருகதாஸ், சுதா கொங்குரா ஆகியவரோடு விஜய் சந்தித்துப் பேசியதாக கூறப்பட்டது.

venkat prabhu

அதனால் அவர்கள் மூவரில் யாரோ ஒருவராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு இயக்குநருடைய பெயர் வெளியில் தெரியவந்துள்ளது. அவர் தான் தளபதி 68 படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு சினிமா துறை சார்ந்த செய்தியாளர்களும் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர்.

அவர் வேறுயாருமில்லை வெங்கட் பிரபு தான். மாநாடு படத்துக்கு பிறகு சிம்பு மட்டுமில்லாமல், வெங்கட் பிரபுவின் வாழ்க்கையும் மாறிவிட்டது. மாநாடு திரைப்படத்தின் மேக்கிங்கால் மிகவும் கவரப்பட்ட விஜய், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து தான் தளபதி 68 படத்துக்காக இந்த காம்போ இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

From Around the web