தளபதி நடிகர் விஜய்யின் கார் கண்ணாடி உடைப்பு..! 

 
1
உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் படம் திரைப்படம் தான் ‘The G.O.A.T’

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதியின் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் ஏகபோக உற்சாகத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது இப்படம் குறித்த தாறுமாறு அப்டேட் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் கேரளாவின் திருவனந்தபுரத்தில் படமாக்கப்பட உள்ளது. இதனால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் கேரளா சென்றுள்ளார்.திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகிறது .

விஜய் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்துள்ளனர். இதனால் கூட்ட நெரிசலில் அவர் இருந்த கார் சிக்கிக் கொண்டு நகர முடியாமல் தவித்துள்ளது. அதன் உள்ளே இருந்த விஜயும் இதனால் கொஞ்சம் தடுமாற்றம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் வந்த கார் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி நொறுங்கியுள்ளது. காரின் பின்பகுதி முன் பகுதி என பல இடங்களிலும் சேதம் அடைந்துள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


 


 

From Around the web