வைரலாகும் தளபதி விஜய்யின் ஆட்டோகிராப்..!

 
1

வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் 'மஞ்சள் வெயில்' என்ற பாடலுடன் அறிமுகமானார்  பாடகர் க்ரிஷ்,  இவரது இயற்பெயர் விஜய் பாலகிருஷ்ணன் ஆகும். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இவர் பாடிய பாடல்கள் பலதும் இவருக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது. இவர் பிரபல நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். 

இந்த நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜயை சந்தித்து தனது ஃபோனில் ஆட்டோகிராப் வாங்கியுள்ளார் பாடகர் க்ரிஷ்.

தற்போது அவரது ஃபோனில் விஜய் போட்டுக் கொடுத்த ஆட்டோகிராப் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவை கலக்கி வந்த நடிகர் விஜய், தற்போது அரசியலிலும் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு விறுவிறுப்பாக தனது கட்சி செயற்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

அதன்படி ஏழை மக்களுக்கு விலையில்லா வீடு, உறுப்பினர் சேர்க்கைக்கு செயலி என தனது கட்சியை விரிவாக்கி செல்கிறார் விஜய்.இவ்வாறான நிலையில் நடிகர் விஜய்யை சந்தித்த பாடகர் க்ரிஷ், தனது ஃபோனில் விஜய்யின் ஆட்டோகிராப் வாங்கியுள்ளார். இது தான் தற்போது வைரலாகியுள்ளது.

From Around the web