இன்று வெளியாகும் தளபதி விஜய்யின் லியோ படத்தின் 3வது சிங்கள்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது.
இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாவது சிங்கிளான ‘Badass’ பாடல் கடந்த 28ம் தேதி வெளியாகி ஹிட்டடித்தது.
இதனிடையே, இன்று லியோ படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாகவுள்ளது. ‘அன்பெனும்’ தொடங்க கூடிய மூன்றாவது பாடல் இன்று வெளியாகும் படத் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது.
Metals lam keela vachitu, petals ah kaila edupom 😁
— Seven Screen Studio (@7screenstudio) October 10, 2023
Get ready to swoon, because #Anbenum is dropping soon ❤️#LeoThirdSingle is releasing Tomorrow.. #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @7screenstudio @Jagadishbliss @SonyMusicSouth #Leo… pic.twitter.com/DFbjzQMLud