தளபதி விஜயின் லியோ படம் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி! ஆனால்...

 
1

வரும் அக்டோபர் 19ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் லியோ. 

இந்நிலையில் இந்த படத்திற்கு ஒரு சில நாடுகளிலும், இந்தியாவில் உள்ள சில மாநிலங்களிலும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

’லியோ ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வட அமெரிக்காவில் அதிகாலை 4 மணி மற்றும் 6.40 மணி காட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அதேபோல் பிரிட்டனில் அதிகாலை 5.10 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் கேரளா, கர்நாடகா உட்பட இந்தியாவின் சில மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் தமிழக விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் ’லியோ ’ படம் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது. அப்படி என்றால் கேரளா, கர்நாடகா உட்பட சில மாநிலங்களில் முதல் காட்சி முடிந்த பிறகு தான் தமிழகத்தில் முதல் காட்சி ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

From Around the web