இன்று திறக்கப்படவுள்ள தளபதி விஜய்யின் புதிய நூலகம்..!

 
1

 விஜய் மக்கள் இயக்கத்தின் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் கூறி இருப்பதாவது, விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் பயிலகம் திட்டத்தை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் தற்போது முதற்கட்டமாக ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டம் இன்று சனிக்கிழமை அன்று காலை 10.35 மணியளவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3-வது தெரு, CTO காலனி, மேற்கு தாம்பரத்தில் துவக்கப்பட உள்ளது.

இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறி இருப்பதாவது, விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் பயிலகம் திட்டத்தை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் தற்போது முதற்கட்டமாக ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டம் நாளை சனிக்கிழமை அன்று காலை 10.35 மணியளவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3-வது தெரு, CTO காலனி, மேற்கு தாம்பரத்தில் துவக்கப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்லாவரம் தொகுதியில் தாம்பரம் மாநகராட்சி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டத்தை துவக்கப்படவுள்ளது. அதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களிலும், அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு இளைஞரணி மற்றும் வேலூர் தொண்டரணி ஆகிய மாவட்டங்களை சேர்த்து 11 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது.

மேலும் இரண்டாம் கட்டமாக வருகிற 23.11.2023 (வியாழக்கிழமை) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து இடங்களிலும், கோவை மாவட்டத்தில் நான்கு இடங்களிலும் ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்களிலும் தென்காசி மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும் சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்த்து 21 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது”, இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

From Around the web