நடிகர் சிம்பு படத்தின் வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசிய வீடியோ வைரல் ..!

2017-ம் ஆண்டு கன்னடத்தில் சிவ ராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியான ‘மஃப்டி’ படம் சூப்பர் ஹிட் அடித்து வசூல் சாதனையும் செய்தது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ள ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, சிவ ராஜ்குமார் கேரக்டரில் சிம்புவும், ஸ்ரீ முரளியாக கெளதம் கார்த்திக்கையும் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.
இந்தப் படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஓபிலி கிருஷ்ணா இயக்கிறார். இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், டீஜய் அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் மார்ச் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் முதல் சிங்கிளான ‘நம்ம சத்தம்’ கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இந்நிலையில் ‘பத்து தல’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘நினைவிருக்கா’ பாடல் 13-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகி வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. பத்து தல படத்துக்காக உடல் எடை அதிகரித்திருந்த சிம்பு தற்போது தனது அடுத்த படத்துக்காக மீண்டும் ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
Live response from #PathuThala audio launch for #Thalapathy words about STR at Varisu audio launch 😍💥❤️ pic.twitter.com/oQsrKJhjlh
— Benroy (@benroy_pius) March 18, 2023
இந்த நிலையில் வாரிசு படத்தில் ‘தீ தளபதி’ என்ற பாடலை நடிகர் சிம்பு பாடியிருந்தார். இதற்காக வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அவருக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்போது பத்து தல இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பப்பட்டது. இதனையடுத்து இந்த வீடியோவைப் பகிர்ந்து பத்து தல இசை வெளியீட்டு விழாவில் தளபதி என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.