ஒடிடியில் வெளியானது தளபதி விஜயின் வாரிசு..!! 

 
1

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வாரிசு’. குடும்ப சென்டிமெண்டில் உருவான இப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளியானது. தில் ராஜூ தயாரித்திருந்த இந்த படத்தில் சரத்குமார், ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், யோகிபாபு, ஜெயசுதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 

1

கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் 25 நாட்களை கடந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் ‘வாரிசு’ படத்தை பார்த்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. 

. இந்த நிலையில் வாரிசு திரைப்படம் பிப்ரவரி 22ம் தேதி அமேசான் ப்ரைமில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதே போல் நேற்றிரவு 12 மணிக்கு ப்ரைம் வீடியோவில் வெளியானது.   

From Around the web