தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு..?

 
1

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்ட உடனேயே கட்சியை கட்டமைக்கும் பணிகளை விறுவிறுவென மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து கூட்டம் முடிந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் உறுப்பினர் சேர்க்கைக்காக ஒரு குழு அமைக்கப்படும் என்றும், அதனுடன் இணைந்து நிர்வாகிகள் அனைவரும் உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதை பயன்படுத்தியே உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சிறப்பாக செய்து 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

From Around the web