வைரலாகும் தளபதி விஜய்யின் ட்வீட்..!

 
1

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.இப்படம் பான் இந்தியா படமாக வெளியானது இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ராஜா ராணி,தெறி,மெர்சல் மற்றும் பிகில் உள்ளிட்ட படங்களுக்கு அனிருத்தை பயன்படுத்தாமல் இருந்து வந்த அட்லீ பாலிவுட்டில் ஷாருக்கான் படத்துக்கு அலேக்காக அட்லீயை அழைத்துச் சென்று மிகப்பெரிய சம்பவத்தை செய்துள்ளார்…படம்,பாடல் என அனைத்தும் செம ஹிட் அடித்தது.

சமீபத்தில் ‘ஜவான்’ திரைப்படம் உலக அளவில் ரூ1000 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது நடிகர் தளபதி விஜய் ஜவான் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்…இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விஜய் ஜவான் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு ஷாருக்கான், அட்லீ மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள் அண்ட் லவ் யூ டூ ஷாருக்கான் சார் என்று தெரிவித்து உள்ளார்…


 

From Around the web