தளபதி விஜய் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு..?
Aug 3, 2024, 08:05 IST
2012 ஆம் ஆண்டு ஒரு புதிய ரோல்ஸ் ராய்ஸ் கோர்ஸ் காரை வாங்கிய விஜய்க்கு 137% வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜய் இதற்கு முறையாக வரி செலுத்தவில்லை. இதனால் நீதிபதி அவருக்கு வரி ஒரு கட்டாய பங்களிப்பு என்று குறிப்பிட்டு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், Empire Autos எனும் கார் டீலர்ஷிப்பில் விஜய் பயன்படுத்திய கார் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. குறித்த கார் இன்ஸ்டாகிராமில் படம் பிடிக்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட்ட செய்தி தற்போது வைரலாகி வருகின்றது.

இந்த கார் தற்போது 2.6 கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளது. ஆனாலும் இந்த காரின் விலை நிரந்தரம் கிடையாது வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளப்படும் எனவும் விற்பனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
 - cini express.jpg)