விரைவில் ஒடிடியில் வெளியாகிறது தளபதி விஜயின் வாரிசு..!! 

 
1

பொங்கலை முன்னிட்டு வெளியான படம் தளபதியின் "வாரிசு". தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படம் தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கியுள்ளார். முதல்முறையாக இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய் தெலுங்கில் அறிமுகமானார்இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.குடும்ப பின்னணியில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் வசூலில் ரூ.250 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் வாரிசு திரைப்படம் பிப்ரவரி 22ம் தேதி அமேசான் ப்ரைமில் ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

From Around the web