முன்னறிவுப்பு எதுவுமில்லாமல் முடிக்கப்பட்ட சன் டிவி சீரியல்..!!
தமிழில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தென்றல் சீரியல் மூலம் தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானவர் ஸ்ருதிராஜ். அந்த தொடருக்கு கிடைத்த பேராதரவால், ‘தென்ற’ ஸ்ருதிராஜ் என்கிற பெயர் பெற்றார்.
அதற்கு பிறகு அன்னக்கொடியும் 5 பெண்களும், விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் போன்ற தொடர்களில் அவர் நடித்தார். இவர் சினிமாவில் நடித்துள்ளார், அதன்படி மாண்புமிகு மாணவன், இனி எல்லாம் சுகமே, காதல் டாட் காம், மந்திரன், ஜெர்ரி போன்ற படங்களில் ஸ்ருதிராஜ் நடித்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் தாலாட்டு. இதில் கிருஷ்ணா கதாநாயகனாகவும் ஸ்ருதி ராஜ் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். அவர்களுடன் ஸ்ரீ லதா, ஸ்ரீதேவி அசோக், சர்வேஷ் ராகவ், தரணி மற்றும் ரிஷி கேசவ் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
கடந்த சனிக்கிழமையோடு தாலாட்டு தொடர் முடிவடைந்தது. எந்தவிதமான முன்னறிவுப்புமில்லாமல் தொடர் முடிக்கப்பட்டுவிட்டதாக ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளார். சீரியல் நிறைவடைந்தவுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை நடிகர் ஸ்ருதிராஜ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.