மணமேடையில் தம்பி ராமையா போட்ட கண்டிஷன்... ஷாக்கான அர்ஜுன் குடும்பத்தினர்..!   

 
1

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த 43 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் நடிகர் அர்ஜுன்.இவர் மகள் ஐஸ்வர்யாவிற்கும்  பிரபல நடிகர் தம்பி ராமையா அவர்களுடைய மகன் உமாபதி ராமையாவிற்கும் நேற்று சிறப்பாக திருமணம் நடந்ததை அடுத்து பல திரை உலக பிரபலங்கள் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

விஷால், சமுத்திரகனி, விஜயகுமார் உட்பட பல திரையுலக பிரபலங்கள் வந்திருந்தனர் என்பதும் அர்ஜுன் தனது சொந்த செலவில் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் இந்த திருமணத்தை மிகவும் சிறப்பாக நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே தனது மருமகள் ஐஸ்வர்யாவிடம் தம்பி ராமையா ஒரு நிபந்தனை விதித்ததாகவும் இதைக் கேட்டு மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

அதாவது மணமகன், மணமகள் ஆகிய இருதரப்பினருமே சினிமா பின்னணியில் இருந்து வந்தாலும் தனது மருமகள் திருமணத்திற்கு பின்னர் நடிக்க கூடாது என்று தம்பி ராமையா கண்டிஷன் போட்டதாகவும் அந்த கண்டிஷனுக்கு ஐஸ்வர்யாவும் எந்த விதமான மறுப்பும் சொல்லாமல் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. மணமகள் ஓகே சொன்னாலும் ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர் தான் இந்த கண்டிஷன் கேட்டு அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே ஐஸ்வர்யா நடித்த ஒரே திரைப்படம் ’பட்டத்து யானை’ என்ற தமிழ் படம் படுதோல்வி அடைந்த நிலையில் அவரை தமிழ் ரசிகர்கள் ஹீரோயினியாக ஏற்று கொள்ளவில்லை. தமிழ் ரசிகர்களால் ஒதுக்கப்பட்ட நாயகி என்ற பெயர் எடுத்த ஐஸ்வர்யா இனி நடித்தாலும் படம் தேறாது என்பது தான் உண்மை என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web