மெல் கிப்சன் அபோகலிப்டோ உடன் போட்டியிடும் ’தங்கலான்’..!!
தங்கலான் படத்தின் அறிவிப்பு சார்ந்த செய்திகள் மக்களிடையே சாதாரணமாக தான் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் அதனுடைய கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியான பிறகு, ‘தங்கலான்’படம் மீது மக்களுக்கு பெரிதும் ஆர்வம் எழுந்துள்ளது. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் அளவுக்கு இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது.
இந்நிலையில் தங்கலான் படத்தின் உருவாக்கத்துக்கு காரணம் அபோகலிப்டோ என்கிற ஹாலிவுட் படம் தான் காரணம். அமெரிக்க சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான மெல் கிப்ஸன் தான் அந்த படத்தை இயக்கினார். இன்னும் அந்த படத்தின் சாதனைகள் மற்றும் உருவாக்கப் பணிகளை முறியடிக்கும் அளவுக்கு ஒரு படம் வெளியாகவில்லை.
ஆனால் தங்கலான் படம் உருவாவதற்கு ‘அபோகலிப்டோ’ தான் காரணம். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அண்மையில் நடந்த படப்பிடிப்பில் விக்ரமுக்கு விளா எலும்பில் அடிப்பட்டுள்ளது. அதனால் அவர் இல்லாத காட்சிகள் மட்டும் இப்போதைக்கு படமாக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இந்த படம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேட்டியளித்து இருந்தார். அதில், தங்கலான் படத்தை ஆஸ்கார் மற்றும் கான்ஸ் உள்ளிட்ட 8 சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறினார். அபோகலிப்டோ படம் அளவுக்கு தங்கலான் படத்துக்கான வரவேற்பை உருவாக்கி தர ஞானவேல்ராஜா முடிவு செய்துள்ளார்.
பிரமாண்ட பட்ஜெட்டில் நவீன தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் இந்த படத்தில் விக்ரம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் பார்வதே திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.