தங்கலான் படம் நிச்சயம் ஆஸ்கர் வரை செல்லும் - தயாரிப்பாளர் தகவல்..! 

 
1

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் தங்கலான்.இந்த படத்திற்காக ரஞ்சித், விக்ரம் மற்றும் படக்குழுவினர் எடுத்து வரும் முயற்சிகளை பார்த்து பலர் ப்ரம்மித்து வருகின்றனர்…படத்தின் முழு ஷூட்டிங் முடிந்த பணிகள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் உரிமையாளர் தனஞ்செயன் அளித்த பேட்டியில் ஒரு அப்டேட் கூறியிருந்தார்.

தங்கலான் திரைப்படத்தை உலகத்தரம் வாய்ந்த திரைப்படமாக நாங்கள் உருவாக்கி வருகின்றோம், நிச்சயம் இந்த திரைப்படத்தை ஆஸ்கர் வரை எடுத்துச் செல்ல நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.

சியான் விக்ரம் மற்றும் பிற நடிகர், நடிகைகள் தங்கள் முழு திறனையும் இந்த படத்திற்காக செலவழித்து வருகின்றனர் அதனால் கண்டிப்பாக பெரிய ஹிட் அடிக்கும் பேசப்படும் என்றும் படத்தை ஆஸ்கர் கொண்டு செல்ல தேவையான அனைத்து முயற்சிகளையும் படக்குழு மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்…அதனால் கண்டிப்பாக நல்ல படமாக உங்களுக்கு இருக்கும் என சொல்லியுள்ளார்…

From Around the web