”சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு உதவிய சிரஞ்சீவிக்கு நன்றி” பொன்னம்பலம் உருக்கம்..!

 
சிரஞ்சீவி மற்றும் பொன்னம்பலம்

பல்வேறு படங்களில் வில்லன் நடிகராக நடித்து புகழ்பெற்ற பொன்னம்பலத்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சமீபத்தில் நடந்துள்ளது. அதற்காக உதவிய நடிகர் சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும் குணச்சித்தர கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் பொன்னம்பலம். தமிழில் தயாரான பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டார். அதை தொடர்ந்து படங்களில் பணியாற்றி வந்தவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நடிகர் பொன்னம்பலம், சரத்குமார், கமல் உள்ளிட்ட பலரிடம் நிதியுதவி கேட்டார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பொன்னம்பலத்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பண உதவி செய்துள்ளார். அதற்காக சிரஞ்சீவிக்குந் நன்றி தெரிவித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

From Around the web