‘அந்த’ 1 சம்பவம்..30 வருட வலி..ஜெயலலிதாவை ரஜினி எதிர்க்க முக்கிய காரணம்! 

 
1

ஆர். எம். வீரப்பன் நினைவு நாளை விட்டு அவர் குறித்து எடுக்கப்படும் ஆவணப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். சத்யா மூவிஸ் வெளியிட்டு இருக்கும் இந்த வீடியோ காட்சியில் ரஜினிகாந்த் எட்டு நிமிடங்களுக்கு பேசியிருக்கிறார்.

ஆர். எம். வீரப்பன் குறித்து பேசுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர், பாட்ஷா படத்தின் வெற்றி விழாவில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அந்த விழாவில் அப்போதைய அமைச்சர் ஆர்.எம் வீரப்பன் முன்னிலையில் தான் மேடையில் வெடிகுண்டு கலாச்சாரம் குறித்து பேசியதாகவும் அமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டு அப்படி பேச கூடாது என்பது தனக்குத் தெரியாது என்றும் பேசி இருக்கிறார். அந்த அளவிற்கு தனக்கு தெளிவு இல்லை என்று கூறியவர் தான் பேசிய விஷயம் தெரிந்த பிறகு ஜெயலலிதா வீரப்பனை பதவியில் இருந்து நீக்கிய சம்பவத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார். 

இந்த சம்பத்திற்கு பிறகு தனக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை எனவும் இரவு, ஆர்.எம் வீரப்பனுக்கு போன் செய்த போதும் அவர் எடுக்கவில்லை என்றும் கூறினார். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்ப்பதற்கு தனக்கு வேறு சில காரணங்கள் இருந்தாலும் கூட இந்த காரணம் மிகவும் முக்கியமானது என்று தெரிவித்தார். 

பின்னர் வீரப்பனிடம் பேசிய அவர், தான் ஜெயலலிதாவிடம் பேசவா என்று கேட்டதாகவும் அதற்கு அவர் “அவங்க ஒரு முறை முடிவு செய்துவிட்டால் அவ்வளவுதான் நீங்க உங்க மரியாதையை இழக்க வேண்டாம். நீங்க அப்படி சொல்லி நான் அங்க போய் சேர வேண்டும் என்று அவசியமில்லை இதை விட்ருங்க” என்று கூறியிருக்கிறார். இந்த சம்பவம் தனக்கு பெரிய வலியை ஏற்படுத்தியதாகவும் இதற்கு பிறகுதான் ஜெயலலிதாவை வெளிப்படையாக எதிர்க்க ஆரம்பித்ததாகவும் கூறியிருக்கிறார். தன்னால்தான் அவருக்கு பதவி பறிபோனது என்ற விஷயம், தனக்கு ஆறாத வலியை கொடுத்தாகவும் கூறியிருக்கிறார். 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை, இப்போது மனம் திறந்து பேசியிருக்கும் ரஜினிகாந்தின் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயலலிதா-ரஜினிகாந்த் மோதல்:

ரஜினிகாந்த், ஜெயலலிதாவை பலமுறை நேரடியாகவே எதிர்த்திருக்கிறார். ஒருமுறை தேர்தல் சமயத்தில், “ஜெயலலிதாவிற்கு ஓட்டு போட்டு வெற்றிபெற வைத்து விட்டால், அதன் பிறகு தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது” என்று கூறியிருந்தார். ஒரு முறை, ஜெயலலிதா வருவதற்காக சாலையில் ரஜினிகாந்தின் வாகனங்கள் உள்பட பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாம்.

அப்போது, ரஜினிகாந்த் தனது காரில் இருந்து இறங்கி அருகில் இருந்த கடைக்கு சென்று சிகரெட் வாங்கி புகைத்துக்கொண்டு வெளியிலேயே நின்றதாக கூறப்படுகிறது. அவரை சுற்றி பெரும் கூட்டம் சூழந்து கொண்டதாம். அப்போது, ஜெயலலிதாவின் வாகனம் அந்த வழியாக கடந்த போது, இப்படி ரஜினியை கூட்டம் சூழ்ந்திருந்ததாகவும், அவர் பார்க்க வேண்டும் என்றுதான், ரஜினி வேண்டுமென்றே இதனை செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 

From Around the web