ஜாக்கிசானின் வைரல் வீடியோவில் இருப்பது அவரது மகள் அல்ல..!!
உலகளவில் பலதரப்பு மக்களாலும் ரசிக்கப்படக் கூடிய நடிகர்களில் ஒருவர் ஜாக்கிசான். குங்ஃபூ கலந்து இவர் செய்யும் ஆக்ஷன் காட்சிகள் இன்றளவும் மக்களால் கொண்டாடப்படுகிறது. பல்வேறு திரை ஆர்வலர்கள் மத்தியில் ஆசிய படங்களின் மீது ஈர்ப்பை ஏற்படுத்திய பெருமை அவரையே சேரும்.
இந்நிலையில் ஜாக்கிசான் நடித்த சண்டைக் காட்சிகளை அவரும், அவருடைய மகளும் பார்த்து உணர்வுகளை பகிர்ந்துகொள்வது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது. இதற்கு உலகளவிலான மக்களிடையே வரவேற்பை குவித்தது. பலரும் இந்த வீடியோ தொடர்பாக உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தனர்.
குறிப்பாக அந்த வீடியோவில் ஜாக்கிசான் மகளாக சொல்லப்பட்ட இளம்பெண் மிகவும் வைரலானார். இந்நிலையில் அந்த பெண் ஜாக்கிசானின் மகள் இல்லை என்றும், குறிப்பிட்டு எடுக்கப்பட்ட காட்சி ஒரு படத்துக்காக உருவாக்கப்பட்டது எனவும், அதில் அந்த இளம்பெண் ஜாக்கிசானின் மகளாக நடித்தார் என்றும் தெரியவந்துள்ளது.