அந்த மனசு தான் சார் கடவுள்..! HIV -யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் குடியரசு தினத்தை கொண்டாடிய விஷால்..!  

 
1

மதகஜராஜா திரைப்படம் 12 வருடங்களின் இருப்பில் இருந்து வெளியாகியுள்ளது.இத் திரைப்பட இசை வெளியீட்டிற்கு கை நடுக்கத்துடன் வந்திருந்த விஷாலை பார்த்து அனைவரும் அனுதாபம் அடைந்தனர் பின்னர் பலர் இவர் குறித்து விமர்சனங்களையும் எழுப்பி வந்துள்ளனர்.

இந்நிலையில் தொடர்ந்து பல நிகழ்வுகளில் சாதாரணமாக கலந்து கொண்டு தனது உடல்நிலை சரியாகியுள்ளதாக தெரிவித்திருந்த இவர் தற்போது மதகஜராஜாவின் வெற்றியினை கொண்டாடி வருகின்றார்.15 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப் படம் கிட்டத்தட்ட 47.45 கோடி வரை சம்பாதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய விஷால் தற்பொழுது HIV எனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை  நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார்.குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

From Around the web