அந்த ரிலேஷன்ஷிப் சரியா போகல.. இப்ப டேட்டிங் பண்ணிட்டு தான் இருக்கேன் -  மம்தா மோகன்தாஸ்..! 

 
1

மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதி உடன் நடித்திருக்கும் மம்தா மோகன்தாஸ், அந்தப்படத்தின் வெளியீட்டிற்காக கார்த்திருக்கிறார். பரவலாக மலையாள சினிமாவில் காணப்படும் மம்தா, 2021 -ல் விஷால் ஆர்யா நடித்த ‘எனிமி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் அவர் பெரிதாக தமிழ் படங்களில் கமிட் ஆகவில்லை.

இந்த நிலையில் ஆங்கில இணையதளத்திற்கு மம்தா மோகன் தாஸ் பேட்டிக்கொடுத்தார். திருமணத்தைப் பற்றி கேட்ட போது, “நான் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நான் ஒருவரை பார்த்தேன். நாங்கள் ‘Long Distance’ ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம். ஆனால், சில காரணங்களால் அது வொர்க் அவுட் ஆகவில்லை. என்னைப்பொருத்தவரை, ரிலேஷன்ஷிப் என்பது முக்கியமானது. ஆனால், அது இலகுவாக இருக்க வேண்டும்.
நான் வாழ்க்கையின் மற்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு, ரிலேஷன்ஷிப்பில் இருந்து வரும் கூடுதலான அழுத்தத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. நீங்கள் ஒரு முறை, இருமுறை ஏன் மூன்று முறை கூட வாய்ப்பை வழங்கலாம். ஆனால், அதற்கு மேல் சென்றால், உங்களுக்கு மனஅழுத்தம் வந்துவிடும். அதன்பின்னர் அது உங்களுக்குத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால், இப்போது நான் ஒருவரை பார்த்திக்கிறேன் ( சிரிக்கிறார்). இந்த உறவில் நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். கல்யாணம் பற்றி யோசிக்கவில்லை.. பார்ப்போம் வாழ்க்கை எப்படி எடுத்து செல்கிறது என்று.. அதைத்தான் நாமும் எதிர்பார்க்கிறோம்.. ஆனால் சில விஷயங்கள் காலப்போக்கில்தான் வெளிவரும்” என்று பேசினார்.

மேலும் பேசிய அவர், “மலையாள திரையுலகை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உணர்கிறேன். நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சினிமாத்துறையும் மலையாள சினிமாவை அங்கீகரித்திருக்கிறது. கடந்த காலங்களில் பார்க்கப்படாமலும், பாராட்டப்படாமலும் கடந்து போன பல படங்கள் இப்போது பார்க்கப்படுகின்றன. மக்கள் தற்போது பழைய திரைப்படங்களை தூசித்தட்டி பார்க்கின்றனர். அந்த நாளில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும், எனக்குள் ஒரு ஆழமான பசி இருந்தது. மலையாள சினிமாவை பொருத்தவரை அவர்களிடத்தில் அதிமான விமர்சனம் இருக்கும். ஆகையால், மலையாள ரசிகர்களிடமிருந்து பாராட்டை பெறும்போது, நீங்கள் ஒரு நல்ல நடிகர் என்ற இடத்தை அடைந்து விட்டீர்கள் என்ற எடுத்துக்கொள்ளலாம். இது வெறும் பார்வை மட்டுமே.. மலையாள சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் படங்கள் உண்மையிலேயே நன்றாக ஓடுகின்றன” என்றார்.

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும், இந்தப்படத்தை நிதிலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். மகாராஜா படத்தில் அனுராக் காஷ்யப் மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

From Around the web