அடேங்கப்பா..! தலைவர் 170ல் இணைந்த பிரபல நடிகைகள்! லிஸ்ட் பெருசா போகுது..! 

 
1

தலைவர் 170 படத்திற்கான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தலைவர் 170 படத்தை ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.

தற்போது தலைவர் 170 படத்தில் நடிக்க போகும் மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்ஸ் குறித்த விவரங்களை லைக்கா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்து வருகிறது.ஏற்கனவே தலைவர் 170 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், துஷாரா விஜயன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார் என்ற இரண்டு அப்டேட்களை லைக்கா நிறுவனம் அறிவித்துவிட்டது.

இந்நிலையில் தலைவர் 170 படத்தில்  பிரபலமான இரண்டு நடிகைகள் இணைந்துள்ளதாக லைக்கா நிறுவனம் இன்று (அக்டோபர் 2) அறிவித்துள்ளது.

இறுதி சுற்று, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ரித்திகா சிங் மற்றும் மோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் மஞ்சு வாரியர் ஆகியோர் தலைவர் 170 படத்தில் இணைந்துள்ளதாக லைக்கா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது. 

மாதவன், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ள ரித்திகா சிங், முதன்முறையாக உச்ச நட்சத்திரமான ரஜினியின் படத்தில் இணைந்துள்ளார்.

 தலைவர் 170 படத்திற்காக 50 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளாராம் ரஜினி. இதனால், அடுத்த வாரம் தொடங்கும் லால் சலாம் ஷூட்டிங், அடுத்தாண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவுபெறும் என சொல்லப்படுகிறது.

1

1

1


 

From Around the web