இது தான் பிரச்சனை..! சரண்யா பொன்வண்ணன் வழக்கில் அதிர்ச்சி தகவல் அளித்த காவல்துறை..!
சரண்யா பொன்வண்ணனின் மகள் மற்றும் அவருடைய உறவினர்கள் காரில் வீட்டுக்கு வந்த போது பக்கத்து வீட்டு நபரான ஸ்ரீதேவியின் கணவர் கேட்டை வேகமாக திறந்து காரை இடித்துள்ளார். இது குறித்து சரண்யா பொன்வண்ணன் மகள் மற்றும் அவரது குடும்பத்தினர் கேட்டபோது ஸ்ரீதேவியின் கணவர் திமிராக பதில் கூறியதாகவும் இதனை கேட்டு வெளியே வந்த ஸ்ரீதேவி ’வாடா போடா’ என்று அவமரியாதையாக பேசியதாகவும் தெரிகிறது.
அப்போது சரண்யா பொன்வண்ணன் மற்றும் அவரது கணவர் வெளியே வந்து ஸ்ரீதேவி குடும்பத்திடம் வாக்குவாதத்தில் ஏற்பட்டதாகவும் இரு தரப்பும் வாக்குவாதத்தில் சில வார்த்தைகள் விட்டதாகவும் தெரிகிறது.
இது குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது ஸ்ரீதேவி மற்றும் அவரது குடும்பத்தினர் சரண்யா பொன்வண்ணன் குடும்பத்திடம் மட்டுமின்றி மற்ற வீட்டினரிடம் பிரச்சனை செய்துள்ளதாகவும் அவர்கள் அடிக்கடி பிரச்சனை செய்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து ஸ்ரீதேவி குடும்பத்தினரை அழைத்து உங்கள் மீதுதான் தவறு என எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளதாகவும் ஸ்ரீதேவிக்கு சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுத்தார் என்பதெல்லாம் சுத்த பொய் என்றும் காவல்துறையினர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.