என்னுடைய விருப்பம் அதை தான் செய்தேன்... விமர்சனங்களுக்கு பதில் சொல்லிய நடிகை அபிராமி..!

 
1

விருமாண்டி படத்தில் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் பெரிய ஹிட் கண்ட நடிகை தான் அபிராமி.மலையாளத்தில் நடிக்க தொடங்கிய இவர் தமிழில் வானவில், சமுத்திரம், சமஸ்தானம், விருமாண்டி வரை நடித்து பின் நீண்ட இடைவேளை எடுத்தார் எங்கே அவர் என பலரும் கேட்டு வந்தனர்.அதன்பின் மீண்டும் 36 வயதினிலே படத்தின் மூலம் நடிக்க தொடங்கிய இவர் இப்போது பல மொழிகளில் நடிக்கிறார்.

நடிகையோ அபிராமி ராகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகியிருந்தார்.பின் கடந்த வருடம் நடிகை அபிராமி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து மகளுக்கு கல்கி என்றும் பெயர் வைத்தார். அவர் தத்தெடுத்ததை அனைவரிடமும் சொல்லியிருந்தார் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.

மகள் குறித்து ஒரு பேட்டியில் அவர் பேசும்போது,சிறு வயதில் இருந்தே ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அதைத்தான் செய்தேன் இது என்னுடைய விருப்பம் என்றே சொல்வேன்.

மகளுக்கு அப்படி ஏன் பெயர் வைத்தேன் என்றால் கல்கி ஒரு அவதாரம் அதை நான் பெண்ணாக பார்க்கிறேன் பெண்ணால் தான் அனைத்தையும் மாற்ற முடியும் என்று கூறியுள்ளார் பெண் என்பவள் சக்தி வாய்ந்தவள் என்று சொல்லியுளளார்.

From Around the web