‘லியோ’ திரைப்படம் கண்டிப்பாக LCU படம் என கூறுவது இதனால தான் ..! 

 
1

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’LEO’ படத்தில் நாயகியாக த்ரிஷா நடித்துள்ளார் என்பதும் த்ரிஷாவின் கேரக்டர் இந்த படத்தில் வேற லெவலில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் த்ரிஷா இருக்கும் நிலையில் தற்போது அவர் ஸ்வீடன் நாட்டில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ஒரு கையில் ஜூஸ் வைத்த மாதிரி இருக்கும் இந்த புகைப்படத்தில் இன்னொரு கையில் அவர் தேள் டாட்டூ உடன் உள்ளதை ரசிகர்கள் கவனித்துள்ளனர்.

ஏற்கனவே சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரின் கழுத்தில் தேள் டாட்டூ இருந்ததை போல் த்ரிஷாவின் கையிலும் தேள் டாட்டூ இருப்பதால் இரு படத்திற்கும் கனெக்ஷன் இருக்கும் என்றும் ‘LEO’ திரைப்படம் கண்டிப்பாக LCU படம் தான் என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

From Around the web