அடுத்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது துணிவு..!! ரசிகர்கள் கொண்டாட்டம்  

 
11

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி ‘துணிவு’ திரைப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியானது.இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசை இந்த படத்தில்  சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஒரு வங்கியில் கணக்கில் காட்டப்படாத 500 கோடியை கொள்ளையடிக்கும் நோக்கில் ஒரு கும்பல் நுழைகிறது. இதை தடுக்க தானும் கொள்ளையன் என்று கூறி அஜித் சம்பவம் செய்யும் படம் தான் ‘துணிவு’. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்கில் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். 

11

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் நெட்ஃபிளிக்ஸில் வரும் பிப்ரவரி 08-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

From Around the web