பிரபாஸ் நடிக்கும் 25-வது படம்- அக்டோபர் 7-ம் தேதி அறிவிப்பு..!

 
பிரபாஸ்

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் அவருடைய 25-வது படம் தொடர்பான அறிவிப்பு வரும் 7-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலி படத்தில் நடித்த பிறகு பிரபாஸ் தேசியளவில் கொண்டாடப்படும் நடிகராக மாறிவிட்டார். அதற்கு பிறகு அவர் நடித்த அனைத்து படங்களும் பான் இந்தியா படமாகவே தயாராகி வருகின்றன.

தற்போது அவர் ‘சாலார்’, ‘ஆதிபுருஷ்’, ‘ராதா  ஷ்யாம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவை அனைத்துமே பான் இந்தியா படங்கள் தான். தெலுங்கு மற்றும் இந்தியில் நேரடியாக உருவாகும் இப்படம், தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளிவருகின்றன.

இந்த படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் புதிய படம் உருவாகவுள்ளது. இது அவருடைய 25-வது படமாக தயாராகிறது. இப்படம் தொடர்பான அறிவிப்பு வரும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய படங்களை போன்று இதுவும் பான் இந்தியா படகமாகவே தயாராகவுள்ளது. ஏற்கனவே அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா பிரபாஸுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை அவர் பிரபாஸ் 25 படத்தை இயக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

From Around the web