இந்த படத்திற்கு பிறகு வெளியான 26 படங்களும் பெரிதாக ஓடவில்லை - வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன்..! 

 
1

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று 350 கோடிகள் வரை வசூலித்து இருந்தது.

இந்த திரைப்படங்களை தவிர வெளியான வேறு திரைப்படங்கள் எதுவும் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. அதிலும் சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு வெளியாகி தோல்வியை சந்தித்து இருந்தது.

இந்த நிலையில், அமரன் படத்திற்கு பிறகு வெளியான 26 படங்களும் பெரிதாக ஓடவில்லை என சினிமா விமர்சனரான ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற் பொழுது அவருடைய பதிவு வைரலாகி வருகின்றது.

அதன்படி அவருடைய பதிவில் கங்குவா, சொர்க்கவாசல் சூது கவ்வும் 2 என லிஸ்ட் நீள்கின்றது. விடுதலை 2 வெற்றி பெற்றதா என்பது சில தினங்களிலேயே தெரிய வரும் என தெரிவித்துள்ளார்.

இதே வேளை இறுதியாக அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் சுமார் இரண்டு வாரங்களிலேயே 1500 கோடிகளை வசூலித்திருந்தது. ஆனால் தமிழ் படங்கள் 100 கோடியை வசூலிப்பதற்கே போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


 

From Around the web